யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல்!

   யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் இராணுவ முகாமில் பணியாற்றும் ரணசிங்க என்ற அதிகாரி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இராணுவ அதிகாரி பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.