நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அது மட்டும் அன்றி கடந்த ஆண்டு மே மாதம் 30, 207 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டில் குறித்த காலப்பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 17.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.