இலங்கையில் அபூர்பமாக பிறந்த பூனை

காலி, பலப்பிட்டிய  பிரதேசத்தில் பெற்றோரின் அரவணைப்பை இழந்த குருவி ஒன்றினை அரவணைத்து பாதுகாத்து வரும் பூனை ஒன்று தொடர்பில் தகவல் வெயியாகியுள்ளது.

பலப்பிட்டிய ஹினாட்டிய டபிள்யூ.ஏ.ஜெக்சன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் வீட்டில் இந்த அற்புதமான பூனை வாழ்ந்து வருகின்றது.

பொதுவாக, பூனை ஒரு பறவையைப் பார்த்தவுடன், அதனை இரையாக பிடித்து வேட்டையாடும். இப்படிப்பட்ட சூழலில், இந்த பூனையின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஜெக்சன் என்பவர் அம்பலாங்கொடையில் பகுதியில் வேலை முடிந்து வந்து கொண்டிருந்த போது குருவிக் கூடு தரையில் சரிந்து விழுந்த நிலை புதிதாக பிறந்த குருவியின் சத்தம் கேட்டுள்ளது.

அந்த குருவிக் குஞ்சை வளர்ப்பது கடினம் எனவும் அது மிகவும் மோசமொன நிலையில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஜெக்சன் அதனை வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெக்சனின் வீட்டில் வளரும் பூனையின் கண்களில் அந்த குருவி குஞ்சு சிக்கியது. பூனையிடமிருந்து அதனை பாதுகாக்க அவர் நினைத்த போதிலும் பூனையே அதற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

ஒரு தாயை போன்று அரவணைத்து அந்த பூனை அதனை பாதுகாக்க ஆரம்பித்துள்ளது.

யாரும் குருவியிடம் நெருங்குவதற்கு இந்த பூனை அனுமதிப்பதில்லை எனவும் வீட்டு உரிமையாளர்கள் மாத்திரம் நெருங்க அனுமதிப்பதாக ஜெக்சன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Next articleகுறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை வெளியானது!