விபரீத முடிவெடுத்த 14 வயது சிறுவன்

  நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும், இடையிலேயே மரணித்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற சிறுவனே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.