யாழ் காங்கேசன்துறையில் வாள் தயாரித்துக் கொண்டிருந்த நால்வர் கைது!

   யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவ கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைதான நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleவிபரீத முடிவெடுத்த 14 வயது சிறுவன்
Next articleசர்வதேச நாணயநிதியத்திற்கு எதிராக வவுனியாவில் தொடர் போராட்டம்!