16 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர், நீதிமன்றில் இன்று (09) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி குறித்த உத்தரவை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான திவங்க ஜயவிக்ரம எனும் கணித ஆசிரியராவார்.

மேலும் இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.