தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பெருமளவான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.