வவுனியாவில் வசிக்கும் ஆண்களுக்கான அவரச அறிவித்தல்!

வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஏழு பேர் சமூக நோய்களுக்கு உள்ளாகி இருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்லுமாறு வவுனியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்களுக்கு கொனோரியா மற்றும் ஹெர்பெஸ் போன்ற சமூக நோய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வைத்திய பரிசோதனை

வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இருப்பின் உடனடியாக வவுனியா வைத்தியசாலையின் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சென்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.