வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயணித்த வாகனம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கியதில் அவருடைய மெய்பாதுகவாலர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரனையில் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த விபத்தின் சாட்சியை அச்சுறுத்தியிருந்தார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னை நாள் பிரதேச சபை உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை வேட்பாளருமான துஷ்யந்தன் விக்டர் ராஜ் என்பவர் மீது சாட்சியாளர் மன்றில் முறையிட்டிருந்தார்.

இதனை விசாரனை செய்த வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த நபரை இன்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலை படுத்தியிருந்தனர்.

இந்நிலையி்ல் சந்தேக நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் அறிவிக்கப்பட்டருந்தது.

எனினும் குறித்த வழக்கில் சந்தேக நபர் பினை கோறுவதாக இருந்தால் உயர் நிதிமன்றினூடாகவே கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleமட்டக்களப்பில் பேத்தை மீனை சமைத்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு !
Next articleபிரித்தானியாவில் பக்தைகளுக்கு நாக்கைக் காட்டி வீடியோ அனுப்பிய சாமியார் பொலிஸ் விசாரணையில்!!