பிரித்தானியாவில் பக்தைகளுக்கு நாக்கைக் காட்டி வீடியோ அனுப்பிய சாமியார் பொலிஸ் விசாரணையில்!!

பிரித்தானியாவில் வசிக்கும் பிரபல சாமியர் ஒருவர் பிரித்தானியக் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக அவர்களது பக்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக குறிப்பிட்ட அந்தச் சாமியார் தொடர்பான ஆபாச வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரிமாறப்பட்டுவந்தன.

பல பெண்களுக்கு அவர் அசிங்கமான செய்கைகளை வெளிப்படுத்துவதான வீடியோக்களை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.

அதேபோன்று பெரும் தொகைப் பணம் இந்தியாவுக்கு களவாக அனுப்பப்ட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.

வீடியோக்களில் உள்ளது அவர் அல்ல என்று அவரது சீடர்களால் கூறப்பட்டுவந்த நிலையில், தற்பொழுது அவர் பிரித்தானிய காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

விரைவில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.