இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றுடன் (12) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.