யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான புதிய பேருந்து சேவை!

யாழ் கீரிமலை நல்லிணக்கபுரத்திலிருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவை இன்று (12-06-2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும் குறித்த போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்களின் நலன்கருதி, நடேஸ்வராக் கல்லூரி ஐரோப்பிய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இன்று இருந்து தொடர்ச்சியாக பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

யாழிலிருந்து மயிலிட்டி நோக்கிப் புறப்படும் 769 தனியார் பஸ் சேவையானது, மாவிட்டபுரம் கீரிமலை வீதி ஊடாக நல்லிணக்கபுரம் சென்று யாழ் நடேஸ்வராக் கல்லூரி ஊடாகப் பயணிக்கவுள்ளது.

பாடசாலை நாட்களில் இடம்பெறவுள்ள குறித்த போக்குவரத்து சேவை காலையில் 7.10, 7.30 மற்றும் 7.40ற்கும் மதியம் 1.40ற்கு பாடசாலையில் இருந்து நல்லிணக்கபுரம் வரை இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.