கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள் !

கிளிநொச்சி – முல்லையடி பகுதியில் இன்று காலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

அதன்படி குறித்த சம்பவத்தில் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

மேலும் வாகனம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.