தந்தை மற்றும் தாயால் தாக்கப்பட்ட மாணவன் எடுத்த முடிவு!

  தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதான பாடசாலை மாணவன் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் காணப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை ஹட்டன் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளான்.

வீட்டைவிட்டு வெளியேற்றம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயிலில் பயணித்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் அம்பர் என்ற பாடசாலை மாணவன் இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை ஹட்டன் ரயில் நிலையத்தில் இறங்கி நின்றபோதே பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளான்.

தனது பெற்றோர் அநுராதபுரத்தில் வசிப்பதாகவும், தனது குடும்பத்தில் மூத்த சகோதரனும் சகோதரியும் இருப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து தான் பாடசாலை கல்வியை பெற்றதாக கூறிய மாணவன், 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் போது பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.