நாட்டில் சீமெந்து, டைல்ஸ், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் பேக்கரி பொருட்கள் உட்பட உள்நாட்டு தொழில்துறை பொருட்களுக்கு கட்டுப்பாடு விலையை விதித்தல் அல்லது வர்த்தமானி மூலம் அடுத்த சில வாரங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ Nalin Fernando தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்றைய தினம் (22-06-2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.