ஜெர்மனி மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முதியோர்களை பாராமரிப்பதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்குகின்ற தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.

ஜெர்மனியில் ஏற்கனவே ஃவிழைக்க பஸியர் என்று சொல்லப்படுகின்ற முதியோர்களை பராமரிப்பதற்காக ஒருவர் தமது ஊதியத்தில் இருந்து பங்களிக்கும் தொகையானது அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகின்றது. இதுவரை காலமும் ஒரு நபரானவர் தமது ஊதியத்தில் 3.05 சதவீதத்தை ஃவிழைக்க பஸியருக்காக வழங்கி வந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளையில் பிள்ளைகள் இல்லாதவர்கள் வேலைசெய்யும் பொழுது தங்களது ஊதியத்தில் 3.4 சதவீதத்தை வழங்கியதாக தெரியவந்துள்ளது. ஆனால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு வேலை செய்கின்றவர்கள் தங்களது ஊதியத்தில் 3.4 சதவீதத்தை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் இல்லாதவர்கள் தங்களது ஊதியத்தில் 4 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று தெரியவந்திருக்கின்றது.

அதன்படி குறிப்பாக 3000 யுரோவை உழைக்கின்ற ஒருவர் மாதாந்தம் இதுவரை காலமும் 56 யூரோ 20 செனட் வழங்கிவந்ததாகவும் எதிர்வரும் காலங்களில் 69 யூரோ வழங்க வேண்டும் என்றும் தெரியவந்திருக்கின்றது.