துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவச் சிப்பாய்

மன்னாரில் கமாண்டோ சிப்பாய் ஒருவர் இரு கால்களிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் – அடம்பன் இராணுவ கமாண்டோ பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றும் கமாண்டோ ஒருவரே இவ்வாறு நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது இரண்டு கால்களிலும் எவ்வாறு துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது என்ற விபரங்களை அறிய அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் கமாண்டோ சிப்பாய் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த திலகரத்ன என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.