மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மன்னாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதில் சிறுதோட்பு, பேசாலை, மன்னாரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மைக்கல் ஜெயரூபன் (வயது-49) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிவரும் அவர் நேற்று முன்தினம் 23ஆம் திகதி மாலை வேலை முடித்து பேசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன் போது மீனோர் சந்தியில் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி இதனை தொடர்ந்து மயக்கம் அடைந்த நிலையில் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக நேற்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.