யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் பதிவாகியுள்ளது

யாழிலில் இருந்து வந்த தனியார் பேருந்து, கிளிநொச்சியில் இருந்து வந்த வேன் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.