கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க இருக்கும் ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

அத்துடன், ஐரோப்பிய பயணத்தின் சாதகதன்மை குறித்தும் ஜனாதிபதி இதன்போது அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பிலான இறுதி அறிக்கையை தயாரிப்பது குறிததும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.