பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு, வெளிநாடு தப்பிச்செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகளை தயார்படுத்தி வழங்கிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால், கடவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கிரில்லவலை, பிலியந்தலை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 52 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் கைதான குறித்த மூவரும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.