யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம்! பொதுமக்கள் அச்சம் !

யாழில் தனது வீட்டிற்கு அருகில் குப்பை போடுபவர்களுக்கு விபத்து நேரிடும் என சூனியம் வைத்துருப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட பதாகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது,

குறித்த பகுதியை சேர்ந்த நபர் வீட்டின் அருகே குப்பை கொட்டுபவர்களுக்கு விபத்து நேரிட வேண்டும் என்பதற்காக மாந்திரீகம் செய்ததாக வீட்டின் முன் பலகையை காட்டி உள்ளார்.

குறித்த நபரின் வீட்டுப் பகுதியின் வீதியில் பலர் குப்பைகளை வீசி வருவதால் அவர் தினமும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்.

பொறுமை இழந்தவர், தனது வீட்டின் வேலியில் பொம்மை, இயந்திரத் தகடு கட்டி, ‘இது மாந்திரீகம். விபத்து ஏற்படும்.. தயவு செய்து தெருக்களில் குப்பை போடாதீர்கள்’ என்ற பேனரையும் காட்டினார்.

அதன்பின், அப்பகுதியில் யாரும் குப்பை கொட்டுவதில்லை என கூறப்படுகிறது.