மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி ! வெளியான காரணம் !

மட்டக்களப்பு – அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காதல் தோல்வி காரணமாக இப்பட்டதாரி மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலையில் ஒரே தரத்தில் கல்வி கற்றுவந்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதலித்துவந்த நிலையில் இருவரும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் நிலை அறிந்த இரு தரப்பு பெற்றோர்களும் பல்கலைக்கழக படிப்பு நிறைவுற்றதும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிந்தது.

ஆயினும் பல்கலைக்கழகம் சென்றதன் பின்னர் காதலனின் மனமாற்றம் காரணமாக மனமுடைந்த யுவதி அதிகளவான மாத்திரைகள் உட்கொண்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.