அரச பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மோதியே நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.