இன்றைய தங்க நிலவரம்

   கடந்த வார இறுதியில் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றையவிலை நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் 5,446 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.43,568 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து கிராம் 4,461 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,688 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை 

அதேவேளை வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.