பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்ப்படாது!

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமுலில் உள்ள பஸ் கட்டணம்  தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.