தங்கத்தின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

  ஜூன் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நிலையில் ஜூலை மாதமான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கவிலை நிலவரம்

அந்தவகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் 5,440 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,520 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து கிராம் 4,456 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,648 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.