மனநிறைவு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக கடற்கன்னியாக மாறிய ஆசிரியர்

   இத்தாலி ஆசிய வேலைக்காக சென்ற இங்கிலாந்து பெண் சம்பள போதவில்லை என கடல்கன்னியாக மாறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள டெவோனில் டோர்க்குவே பகுதியை சேர்ந்தவர் மோஸ்கிரீன். 33 வயதான இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்ற அழைப்பு வந்தது.

இதனால் சிசிலிக்கு குடிபெயர்ந்த அவர் அங்கு நல்ல சம்பளத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஆனாலும் அந்த வேலையில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை.

முழுநேர பணியாக கடல் கன்னி வேலை

இந்நிலையில் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற போது சில பெண்கள் ‘மேஜிக்கல் மெர்மன்’ உடை அணிந்து கடல் கன்னிகள் போல போஸ் கொடுப்பதை பார்த்தார். இது அவருக்கு சந்தோஷமாக இருந்தது.

தானும் அவர்களை போல கடல் கன்னியாக மாறுவதற்கு ஆசைப்பட்டார். இதனால் தான் பார்த்து வந்த ஆசிரியையை வேலையை உதறி தள்ளிய மோஸ்கிரீன் முழுநேர பணியாக கடல் கன்னி வேலையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதற்காக அவர் வால் போன்ற உடை அணிந்து கடல் கன்னியாக மாறிய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 அவரது பதிவில், வாழ்ந்தால் போதும். நான் விரும்பும் ஒன்றை செய்கிறேன். அது தான் முக்கியம் என மோஸ்கிரீன் குறிப்பிட்டுள்ளார்.