மன்னம்பிட்டிய விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

மனம்பிட்டிய கொடலீயவில் பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 உயிரிழந்திருப்பதாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் 1 பெண், உள்ளடங்கலாக 9 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

9 பேர் பொலநருவ வைத்தியசாலையிலும் ஒரு ஜனாஸா மண்ணம்பட்டி வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் கதுருவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது உடல் அடையாளம் தெரியாமல் வைத்தியசாலையில் உள்ளது.

பஸ்ஸில் பயணித்தவர்களில் 4 பேர் இன்னும் கிடைக்கவில்லை, அவர்களை தேடுதல் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயற்பட்டுவந்த நிலையில் அவர்கள் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.