மன்னம் பிட்டியவில் விபத்திற்கு உள்ளன பஸ்சிற்கு அனுமதிப்பத்திரம்  வழங்கப்படவில்லை

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் கொட்டலிய  பாலத்திலிருந்து ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம்  வழங்கப்படவில்லை  என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும்  ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு  விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.