இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதம் முதல் 112,000 இற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேலைக்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன், அவர்கள் உட்பட 152,000 இற்கும் அதிகமானோர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளைகுடா பிராந்திய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சவூதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட இறுதிக்குள் குறைந்தது 300,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.