யாழில் கணக்காளரை கடத்திய பெண் கைது!

யாழ்.கல்வியங்காட்டில் கணக்காளரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் மானிப்பாயில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

13 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற பெண்
கடந்த ஞாயிற்று கிழமை யாழ்.நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த கணக்காளர் ஒருவரை காணி பிணக்கு ஒன்றினால் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தலமையிலான குழு இக்கடத்தலை அரங்கேற்றி இருந்துது.

கணக்காளரை கடத்தி 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை யாழ்.மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.