இன்றைய ராசி பலன்கள் 15.07.2023

மேஷம் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்களில் நாட்டம் கொள்வீர்கள். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள்.

ரிஷபம் வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தாராளமாக செலவு செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.

மிதுனம் உங்கள் பெயரைக் கெடுக்க உடன் இருப்பவர்களே முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக பணம் புரட்ட சிரமப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிக பயனடைய மாட்டீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நீதிமன்றம் செல்வீர்கள். தாயாருக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

கடகம் நிலையான வருமானத்தை உருவாக்க பாடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை சிறப்பாக நடத்துவீர்கள். அரசாங்க காண்ட்ராக்ட்டுகள் பெற்று தொழில் துறை போட்டியாளர்களை கிறுகிறுக்க வைப்பீர்கள்.

சிம்மம் “உனக்கும் எனக்கும் தான் பொருத்தம். அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்” என்று காதலியிடம் வசனம் பேசுவீர்கள். தோட்டத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சேமிப்பில் இருந்த புளியை நல்ல விலைக்குப் விற்பீர்கள். வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.

கன்னி “கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா” என்று இளம் வயதினர் காதல் தூது விடுவீர்கள். வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவீர்கள். தந்தையார் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள். சிறிய வியாபாரத்தில் பெரிய வருமானம் பெறுவீர்கள். சேமிப்பில் இருந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். புதிய ஆர்டர்களை வெளியூர்ப் பயணங்களில் அடைவீர்கள்.

துலாம் “போனால் போகட்டும் போடா” என்ற விரக்தி நிலையில் இருப்பீர்கள். ஏதோ ஒருவகையில் வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். நம்பிச் சொன்னவர்கள் இல்லை என்று கை விரித்ததால் கவலைப்படுவீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கும் கிறுக்குத்தனத்தைச் செய்து அவமானப்படாதீர்கள்.

விருச்சிகம் “காலங்களில் அவள் வசந்தம்” என்று காதல் வலை வீசுவீர்கள். இல்லத்தில் பொங்கும் மகிழ்ச்சி பெருக்கால் மன நிம்மதி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள். கட்டுமான துறையில் முத்திரை பதிப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதியில் நல்ல பலனை பெறுவீர்கள். வாக்கு வன்மையால் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.

தனுசு “துணிந்து நில்.. தொடர்ந்து செல்… தோல்வி கிடையாது தம்பி” .சிறிய முதலீடுகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். வியாபாரத்தில் கொழுத்த லாபம் அடைவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குச் சேர வேண்டிய பூர்வீகச் சொத்தைப் பெறுவீர்கள். பலசரக்கு வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வாராக்கடன் வந்து சேரும்.

மகரம் “கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியல” கை மீறி போகும் குடும்ப செலவால் கஷ்டப்படுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க ஆசைப்படுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலுக்கு தகுந்த ஆதாயத்தை அடைவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

கும்பம் “சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க”என்று உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள். கடுமையாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள். அலுப்பின்றி வேலை பார்த்து முதலாளியை சந்தோஷப்படுத்துவீர்கள். அரசு வேலையில் நேர்மையாக நடந்து நல்ல பெயர் எடுப்பீர்கள். காதலியின் உதவியால் பணக்கஷ்டத்திலிருந்து மீள்வீர்கள்.

மீனம் “நீங்கள் தொட்டால் எங்கும் பொன்னாகுமே” எந்த நிலையிலும் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள். உணவுப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வீர்கள். தென்னந் தோப்புக் குத்தகை மூலமாக வருமானத்தைப் பெருக்குவீர்கள். பைனான்ஸ் தொழிலில் அதிரடியாக நல்ல லாபம் பார்ப்பீர்கள்.