காலாவதியான இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிறார்களின் மனங்களை கவரும் வகையில் கண்டி நகரில் ஒரு பெரிய காட்சியறையை நடத்தி மனித பாவனைக்கு உதவாத காலவதியான இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொபி, சொக்கலேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையம் கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த இனிப்பு பண்டங்களில் உற்பத்தித் திகதி மறைக்கப்பட்டு காலவதியான திகதி மாற்றப்பட்டு, விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.