முல்லைத்தீவில் பூப்பறிக்க சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!

முல்லைத்தீவு தாமரைக்குளம் ஏரியில் தாமரை பறிக்க படகில் பயணித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தாமரை பூ பறிக்க இருவர் படகில் பயணித்த போது படகில் இருந்த ஓட்டையிலிருந்து நீர் கசிந்து படகு மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிர்ழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.