பன்னீர் பிரியர்களுக்கான செய்தி!

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்.

முக்கியமாக இந்த பன்னீரை வீட்டிலேயே நாம் எளிதில் தயாரிக்கலாம். பன்னீரை, காட்டேஜ் சீஸ் என்றும் அழைப்பதுண்டு.

பன்னீரில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன.

இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

புரோட்டீன் அதிகம்

அசைவ உணவாளர்களை விட சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

பன்னீரில் புரோட்டீன் அதிகம். எனவே சைவ உணவாளர்கள் போதுமான புரோட்டீன் உடலுக்கு கிடைக்க பன்னீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

பன்னீரில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை.

புரோட்டீன் அதிகம்

அசைவ உணவாளர்களை விட சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

பன்னீரில் புரோட்டீன் அதிகம். எனவே சைவ உணவாளர்கள் போதுமான புரோட்டீன் உடலுக்கு கிடைக்க பன்னீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

பன்னீரில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை.

தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்

தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும்.

மிகவும் ஒல்லியாக இருந்தால், குண்டாக விரும்பினால் பன்னீரை அடிக்கடி சாப்பிடலாம்.

இதனால் அதில் உள்ள புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும்.

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பன்னீரை உட்கொள்ளும் போது உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் சரியாகும். 

இரத்த சர்க்கரை கட்டுப்படும்

பன்னீரில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது.

அதோடு இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கிறது.

இருப்பினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பன்னீரை தங்களின் தினசரி உணவில் சேர்ப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது

தற்போது நிறைய பேர் எலும்பு தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

இப்படி எலும்புகளில் பிரச்சனை வருவதற்கு கால்சியம் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.

பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்துக்களாகும்.

எனவே பன்னீரை அடிக்கடி உட்கொள்ளும் போது எலும்பு மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.