இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மேலும் பல உதவிகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்குவதற்கு நாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தோம். புதிய கட்சி ஒன்று அமைத்தால் தெருத் தெருவாக அலைய வேண்டி ஏற்படும் என்றார்கள். நாங்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டோம். சற்றும் தளராமல், அரசியல் அபாயத்தை தாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினோம்.

நீங்கள்தான் எங்கள் கட்சியின் பலம். சரியான முடிவுகளை எடுப்பதற்கான பலத்தை நீங்கள் எப்போதும் எங்களுக்குக் கொடுத்தீர்கள். உள்ளூராட்சி தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மட்டுமன்றி பொதுத் தேர்தலிலும் எமது கட்சியை மிக உயர்வாக உயர்த்தினீர்கள். இதற்கிடையில், கொரோனா என்ற உலகளாவிய தொற்றுநோய் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்தது. உலக அளவில் கொரோனா தொற்று பரவலுடன் பொருளாதார நெருக்கடியும் உருவானது. ரஷ்ய – உக்ரேனிய போர் தொடங்கியது. நம்மைப் போன்ற சிறிய பொருளாதாரம் உள்ள நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், மக்கள் படும் துன்பத்தையே மகிழ்ச்சியாகக் கருதிய உதவாக்கரை அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளங்களில் கிருமிகளை விதைத்தன. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்த போது, அந்த உதவாக்கரையினர் நாட்டைக் நாட்டை பள்ளத்தில் தள்ள வேலை செய்தார்கள். இதற்கு எங்கள் மக்கள் ஓரளவு உதவினார்கள். இப்போது அது அனைத்தும் வெளிப்பட்டு வருகிறது.

நாட்டில் எரிபொருள் வரிசைகள் மற்றும் எரிவாயு வரிசைகள் உருவாகின. மின்சாரம் வழங்க முடியவில்லை. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் இருந்தனர். இந்த பிரச்சினைகளை எங்களால் சரியாக கையாள முடியவில்லை. அந்தத் தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் மௌனத்தைப் பயன்படுத்திக் கொண்டு சதிகாரர்கள் எங்களைத் தாக்கினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை. வீடுகளை எரிப்பதன் மூலம் எங்களை தடுக்க முடியாது. தடைகள் வரும்போது நின்று விடாமல் இருப்பது போல் சவால்களில் இருந்து தப்பி ஓட மாட்டோம். நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களைத் தனியாக விடமாட்டோம். இதற்குப் பிறகு எங்கள் கட்சிக்காரர்களுக்கு தொல்லை தர அனுமதிக்க மாட்டோம். இப்போது நாங்கள் வேலை செய்கிறோம். சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

சதிகாரர்களுக்கு எதிராக பலமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டோம். ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. இது மிகவும் திறந்த திட்டம். பொய் சொல்லவில்லை. நாங்கள் நாட்டுக்கு உண்மையை கூறுகிறோம். எங்களுடன் யார் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம். ஆனால், நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுகின்றனரே தவிர, நாட்டுக்காக வேலை செய்ய ஒன்று கூடுவதில்லை. சந்திகளில் மட்டுமன்றி முகநூலிலும் நாட்டைக் கட்டியெழுப்பும் அநுரகுமாரவுக்கு எந்த திட்டமும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க அவர்களை என்னைப் போல் திட்டியவர்கள் எவரும் இல்லை. ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து நாட்டுக்காக உழைக்கிறோம். தற்போது 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சதிகாரர்கள் மட்டுமன்றி எம்முடன் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்றவர்களும் எம்மை அந்நியப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களால் அதை ஒருபோதும் செய்ய முடியாது.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. சவால்களில் இருந்து நாம் ஓடுவதில்லை. இன்று எரிவாயு வரிசைகள் இல்லை. எரிபொருள் வரிசைகள் இல்லை. 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது. டொலர் பெறுமதியடைந்து வருகிறது. ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளார். பெருந்தோட்ட மற்றும் வடகிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அந்த விஜயத்தின் போது எமது நாடு மேலும் பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளும். மேலும், இரு நாடுகளுக்குமான பல முக்கிய விஷயங்கள் அங்கு வெளிப்படையாகவும் பரவலாகவும் கலந்துரையாடப்படவுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்க முடியாது. சஜித் பிரேமதாச இன்னும் அரசியலில் ஒரு குழந்தை. நடைமுறை அரசியல் பற்றி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜே.வி.பி தனது பெயரையும் சின்னத்தையும் மாற்றியுள்ளது. ஆனால் இப்போதும் அதே பழைய ஜோக்கர்கள் தான் இருக்கிறார்கள். நாம் ஏன் பொய்களை சொல்ல வேண்டும் நாங்களும் சிறிய சிறிய வேலைகள் செய்வதுதான். ஆனால் ஜே.வி.பி.யை சேர்ந்தவர்கள் குடிப்பதில்லையாம். ஆனால் லால் காந்தா குடித்துவிட்டு, அனுராதபுரத்தில் வண்டியை மின்விளக்குக் கம்பத்தில் மோதியுள்ளார். கட்சி உலகிற்கு பொய் சொல்கிறது.

75 வருட சாபம் பற்றி அனுரகுமார பேசுகிறார். ஒன்றும் செய்யாதது போல். சந்திரிக்கா ஜனாதிபதியாவதற்கும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கும் ஜே.வி.பி உதவியது. 2004 இல், சந்திரிகாவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் திருடர்களை பிடிக்கும் அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்கியது. அந்தக் காலத்திலும் ஜே.வி.பி திருடர்கள்… திருடர்கள் என்று உலகம் சுற்றின. ஒரு திருடனும் பிடிபடவில்லை.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் பெரும் பலத்தை வழங்கினார். மாகாண முதலமைச்சராக பிரசன்ன, மஹிந்த காற்றை நடத்துவதற்கு பெரும் பங்காற்றினார். மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக மக்களைத் திரட்டி ஆரம்பிக்கப்பட்ட மஹிந்த காற்று வேலைத்திட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நாங்கள் தோற்றபோது, ஜனாதிபதி சிறிசேனா வலுக்கட்டாயமாக எங்கள் கட்சியின் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பிரசன்னவும் தன்னைச் சுற்றியிருந்த மக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சுற்றி திரளச் செய்வதில் பெரும் பங்காற்றினார். நாம் உருவாக்கிய கட்சிதான் இன்று இவ்வாறு முன்னுக்கு வந்துள்ளது. இன்று ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார். நீங்களும் நானும் இணைந்து உருவாக்கிய இந்தக் கட்சியால்தான் அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். நாம் உருவாக்கிய அரசியல் நடப்பு காரணமாக. இந்த நாட்டின் ஜனாதிபதி யார், பிரதமர் யார், யார் நாட்டை ஆள்வது என்பதை இன்னும் நாம் உருவாக்கிய கட்சிதான் தீர்மானிக்கிறது. நாங்கள் இந்தக் கட்சியை உருவாக்கியபோது சிலர் எங்களைக் கேலி செய்தனர். ஆனால் சவாலை ஏற்றுக்கொண்டோம். உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 69 இலட்சம் ஆணை பெற்று ஜனாதிபதி நியமிக்கப்பட்டார். 2/3 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் அமைந்தது. இக்கட்சியின் மாபெரும் பலம் மகிந்த ராஜபக்ச. சவால்களுக்கு நாங்கள் பயப்படவில்லை. சவால்களை அச்சமின்றி எதிர்கொள்ளும் கட்சி நாங்கள் என்றும் அவர் கூறினார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ துட்டியாராச்சி, கம்பஹா மாநகரசபையின் முன்னாள் மேயர் எரங்க சேனாநாயக்க, கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குணவர்தன உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.