அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், வீட்டின் ஜன்னலில் இருந்து ஒருவரை தேடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறியதும், அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.