நவீன தொழில் நுட்ப்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்கத்திற்கு திட்டம்

   அமெரிக்கா கலிபோர்னியாவில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகில் முதன்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள எந்த உயிரணுவிலிருந்தும் மனித முட்டைகள் மற்றும் விந்தணுக்களை ஒரு ஆய்வகத்தில் உருவாக்க முடியும்.

Vitro Gametogenesis 

இந்த செயல்முறை vitro gametogenesis (IVG) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், மலட்டுத்தன்மையுள்ளவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் முதல் முறையாக தங்கள் சொந்த உயிரியல் குழந்தைகளைப் பெறும் திறனைப் பெற்றுள்ளனர்.

அதன்படி கலிபோர்னியாவில் உள்ள Biotech நிறுவனமான conception, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.