கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் மேற்கொள்ளும் மக்கள்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாகவும், சேவை அரசியலமைப்பின் படி விமான நிலைய ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை என்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.