தமிழர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இன்று மாலை வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 5 பிள்ளைகளின் தந்தை பலி

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெத்துள்ளனர்.