திடீரென மயக்கமுற்ற மாணவர்களால் பரபரப்பு!

 கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (21) 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயக்கமுற்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனைய மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மாணவர்கள் மயக்கமுற்றதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை .