யாழில் பொலிஸ் வளாகத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழில் கடையொன்றின் உரிமையாளர் பொலிஸ்நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்பாக உள்ள பொலிஸ்நிலைய வளாகத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந் நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை

கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.