கனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவருக்கு நேர்ந்த கதி

கனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லிபெக்ஸின் டார்மவுத் பகுதியின் நீச்சல் தடாகமொன்றின் கழிப்பறையில் காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 41 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்ய பயன்படுத்திய கருவிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமியை குறித்த நபர் படமெடுத்துள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக ஹலிபெக்ஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் பொலிஸார் ளெியிடவில்லை.