தமிழகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பெற்றோல் கடத்த முயற்சி!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பெட்ரோலை பறிமுதல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் – தூத்துக்குடியில் 400 லீற்றர் பெட்ரோலை வடபாகம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு சோதனை

தூத்துக்குடி – திரேஸ்புரம் கடற்கரையில் வடபாகம் தனிப்படை காவல்துறை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.