ஆடிப் பெருக்கில் வழிபடும் முறை

ஆடி மாதத்தில் எந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அது சிறப்பான பலனை தரும். ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படுவதால் இந்த மாதத்தில் அம்பிகை வழிபாட்டினை முறையாக மேற்கொண்டால் நினைத்த காரியம் நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அம்மனின் அருளை பெருவதற்கு ஏற்ற மாதம் என்பதால் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய நாட்களில் சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்பு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு விழா கருதப்படுகிறது. இந்த நாளில் நல்ல காரியங்களை துவக்கினாலும், எந்த மங்கல பொருளை வாங்கி வைத்தாலும் அது பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.

அதனால் தான் ஆடிப் பெருக்கு நாளில் விதைகள் விதைத்து விவசாயத்தை துவங்குவது, வீட்டில் மங்கல பொருட்களை வாங்கி வைத்தல், திருமணம் போன்ற சுப காரிய பேச்சுக்களை துவக்குவது ஆகியவற்றை மக்கள் மேற்கொள்கிறார்கள். 

ஆடிப்பெருக்கன்று இப்படி வழிபட வேண்டுமாம் | Adipurukan Should Be Worshiped Like This

ஆடிப்பெருக்கு

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகும்.

ஆடி மாதத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப் பெருக்கு விழா.

ஆடி மாதத்தில் 18 வது நாளை ஆடிப்பெருக்கு என கொண்டாடுகிறோம். ஆடிப்பெருக்கு, ஆடி 18 ம் பெருக்கு என பல பெயர்களில் இந்த நாளை மக்கள் அழைக்கிறார்கள்.

ஆடிப்பெருக்கன்று இப்படி வழிபட வேண்டுமாம் | Adipurukan Should Be Worshiped Like This

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையில் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு, காவிரி அன்னைக்கு பொங்கல், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகள் படைத்து வழிபடுவார்கள்.

காவிரி அன்னைக்கு சீர் படைத்து வழிபடும் வழக்கமும் உண்டு. இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலையை ஆற்றில் விட்டு, காவிரி பொங்கி வருவதை போல் தங்களின் திருமண வாழ்வும், மகிழ்ச்சியும் பொங்கி, பெருகி வர வேண்டும் என காவிரி அன்னையை வேண்டிக் கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று இப்படி வழிபட வேண்டுமாம் | Adipurukan Should Be Worshiped Like This

பெண்கள் வழிபடும் முறை

திருமணமாகாத பெண்களும் ஆடிப் பெருக்கு நாளில் காவிரி தாயையும், அம்மனையும் வழிபட்டால் விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கூடி வரும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அப்படி ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.

வேப்பிலை மாலை சாற்றி வழிபடலாம். ஆடிப் பெருக்கு நாளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் நம்முடைய வாழ்வில் குறைவின்றி பெருகி வரும் என்பது ஐதீகம்.