தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனுக்கு நிகழ்ந்த சோகம்!

அஹங்காமவில் கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அஹங்காமவில் மலைக்கு அருகில் உள்ள கடலில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை அவதானித்த அண்ணன் ஜனித சதுரங்க அவ்விடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனுக்கு நேர்ந்த சோகம் | Brother Death Went To Save His Brother

கடலில் குதித்த அண்ணன்

உடனடியாகச் செயல்பட்ட அவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது சகோதரனைக் காப்பாற்றும் நோக்கில் கடலில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கடல் அலையில் சிக்கிய சமீர சந்தருவன் நீண்ட நேர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Previous articleஇன்றைய ராசி பலன்கள் 27.07.2023
Next articleநீர் கட்டணம் அதிகரிப்பு!