நீர் கட்டணம் அதிகரிப்பு!

எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவ் யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleதம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனுக்கு நிகழ்ந்த சோகம்!
Next articleபேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் ஆரம்பம்