பேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் ஆரம்பம்

பேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் இன்றைய தினம் வழமைப்போல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நடவடிக்கைகள் இன்று காலை முதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மெனிங் சந்தையில் உள்ள விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சுமத்தி நேற்றைய தினம் மெனிங் சந்தை தொழிற்சங்கத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தை செயற்பாடுகள் நேற்று முற்றிலும் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அங்கு 17 பேர் கைது செய்யப்பட்டு நேற்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.