குழவிக் கொட்டுக்கு இலக்கான ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

 

தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை லிந்துலை பேராம் தோட்டத்தில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கூட்டை தாக்கிய கழுகு

மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கிய நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து பேரும் பெண் தொழிலாளர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அவ் ஐந்து பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.